இலங்கையின் (Srilanka) சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்கின்ற கோஷத்தின் அடிப்படையில் கிளிநொச்சியில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டடமானது நேற்று (4.2.2025) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி (Klinochchi) கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று கொண்டிருக்கின்றது.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam), சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), முன்னாள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (Selvaraja Gajendran), காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் (Rathanasingam Muralitharan) உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அத்தோடு, எங்கே எமது உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்., எமது நிலம் எமக்கு வேண்டும் மற்றும் வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு என பாரிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் மக்கள் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றது.