யாழில் பேருந்தில் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சி பறிபோன உயிர்

user 10-Dec-2025 இலங்கை 18 Views

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (9) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை(9) அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்தார்.

இதன்போது செம்மணிப் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சித்துள்ளார்.

இதன்போது பேருந்து செம்மணி வளைவில் திரும்பும்போது கீழே விழுந்து மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related Post

பிரபலமான செய்தி