போப் பிரான்சிஸின் உடல் நிலை முன்னேற்றம்!

user 28-Feb-2025 சர்வதேசம் 98 Views

இரட்டை நிமோனியாவுடன் இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புனித போப் பிரான்சிஸ், மற்றொரு அமைதியான இரவைக் கழித்ததாகவும், தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும் வத்திக்கான் வெள்ளிக்கிழமை (28) தெரிவித்துள்ளது.

88 வயதான பிரான்சிஸ், பெப்ரவரி 14 அன்று ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் மூச்சுக்குழாய் ஒவ்வாமையால் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, பின்னர் அது மிகவும் தீவிரமான ஒன்றாக வளர்ந்தது கண்டறியப்பட்டது.

இந்த நிலயைில் வியாழக்கிழமை மருத்துவப் புதுப்பிப்பில், போப்பின் உடல்நிலையில் “தொடர்ந்து முன்னேற்றம் காணப்பட்டது” என்று வத்திக்கான் கூறியது.

போப்பின் உடல்நிலை குறித்து விவாதிக்க அதிகாரம் இல்லாததால் பெயர் வெளியிட விரும்பாத வத்திக்கான் அதிகாரி ஒருவர், வியாழக்கிழமை அறிக்கை போப்பின் உடல்நிலை “மோசமானது” என்று விவரிக்காத தொடர்ச்சியான இரண்டாவது அறிக்கை என்று குறிப்பிட்டார்.

அவர் ஆபத்தான கட்டத்தை கடந்து விட்டார் என்று கூறலாம் என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

வத்திக்கானின் மனித மேம்பாட்டு அலுவலகத்தின் தலைவரான கார்டினல் மைக்கேல் செர்னி, இத்தாலியின் லா ஸ்டாம்பா செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், பிரான்சிஸின் உடல் நிலை நாம் எதிர்பார்ப்பதை விட மொதுவாக குணமடைந்து வருவதாக குறிப்பிட்டார்.

Related Post

பிரபலமான செய்தி