வெளிநாடொன்றில் யாழ் குடும்ப பெண்ணுக்கு இளைஞனால் வந்த வினை

user 09-Jan-2026 சர்வதேசம் 25 Views

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புங்குடுதீவு - கண்ணகைபுரம் பகுதியை சேர்ந்தவரும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான 35 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயான ஒருவரரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Etobicoke Dixon (எட்டோபிகோக் டிக்சன்) பகுதியில் குறித்த பெண் வீதியைக் கடக்கும் போது கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குறித்த இளம் குடும்பப் பெண் மீது மோதியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக அந் நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அந் நாட்டுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Post

பிரபலமான செய்தி