புதுக்குடியிருப்பில் அரச வங்கியால் சிரமத்தை எதிர்கொள்ளும் பொதுமக்கள் !

user 10-Mar-2025 இலங்கை 54 Views

புதுக்குடியிருப்பில் உள்ள இரு அரச வங்கிகளில் இலத்திரனியல் இயந்திரம் சீரின்மையால் இலத்திரனியல் அட்டை பாவனையாளர்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள அரச வங்கிகளின் இலத்திரனியல் இயந்திரத்தில் (ATM) பாவனையாளர் ஒருவர் இன்றையதினம் (09.03.2025) இலத்திரனியல் அட்டையினை செலுத்தி பணம் எடுப்பதற்காக இயந்திரத்திற்குள் இலத்திரனியல் அட்டையினை (Atm card) செலுத்தியுள்ளார்.

அப்போது பணம் வழங்கப்பட்டதாக வைப்பிலிருந்து வெட்டப்பட்டு தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் இலத்திரனியல் இயந்திரத்திலிருந்து பணமும், இலத்தினியல் அட்டையும் வெளிவரவில்லை.அவ்விடத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தரும் இருந்திருக்கவில்லை.

அதேபோன்று புதுக்குடியிருப்பு மற்றுமொரு அரச வங்கியில் வேறொரு நபர் இன்றையதினம் தனது இலத்திரனியல் அட்டையினை இலத்திரனியல் இயந்திரத்திற்குள் செலுத்திய போது இலத்திரனியல் அட்டை எந்த ஒரு செயற்பாடும் இல்லாமல் வெளிவரவில்லை.

குறித்த வங்கியில் இருந்த உத்தியோகத்தர்களிடம் வினவிய போது உத்தியோகத்தர்கள் இருந்த போதும் இன்றையதினம் தரமுடியாது என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே இவ்வாறு பல்லாயிரக்கண மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் உள்ள அரச வங்கிகளின் இலத்திரணியல் இயந்திரங்கள் சீரின்மையால் அவசரநிலமைகளில் தேவைகளுக்கு பணம் எடுப்பவர்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related Post

பிரபலமான செய்தி