ஒரே இரவில் உக்ரைனின் பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா !

user 14-Mar-2025 சர்வதேசம் 66 Views

உக்ரைனின் 77 ட்ரோன்கள் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட போதிலும், ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் எல்லையான மேற்கு பிரையன்ஸ்க் பகுதியில் 30 ட்ரோன்களும் கலுகா பகுதியில் 25 ட்ரோன்களும் மேலும் குர்ஸ்க், வோரோனேஜ், ரோஸ்டோவ் மற்றும் பெல்கோரோட் பகுதியில் ஏனைய ட்ரோன்கள் என மொத்தம் 77 ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளன.

முன்னதாக, மொஸ்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 90இற்கும் மேற்பட்ட ட்ரோன்களை செவ்வாயன்று வீழ்த்தியதாக கூறப்பட்டது.

இதற்கிடையில், பல உக்ரேனிய நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.       

Related Post

பிரபலமான செய்தி