ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த அறிக்கை !

user 08-Jan-2025 இலங்கை 62 Views

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் (டிஐடி) மேற்கொண்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக மொத்தம் 747 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

14 உயர்நீதிமன்ற வழக்குகளில் மொத்தம் 100 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், பிரித்தானிய தொலைக்காட்சி வலையமான 'சேனல் 4' ஆவணப்படத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் ஏனைய விசாரணைகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இதன் மூலம் வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் பதவியேற்றவுடன் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான புதிய கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விஜேபால சுட்டிக்காட்டினார்.

இந்த விசாரணைகளின் கண்டுபிடிப்புகள் நவம்பர் 11 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 12 பொதுமக்கள் சாட்சிகள், 7 இராணுவத்தினர், 24 காவல்துறை அதிகாரிகள், 3 சிறை அதிகாரிகள் என மொத்தம் 48 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை வெளிக்கொணரவும் மேலதிக ஆதாரங்களை திரட்டவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

Related Post

பிரபலமான செய்தி