யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிப்பு !

user 20-Mar-2025 இலங்கை 95 Views

அனுமதிப்பத்திரம் இன்றி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று புதன்கிழமை (19) 12.15 மணியளவில் பளையில் இருந்து அச்சுவேலி நோக்கி மணல் கடத்திச் சென்ற டிப்பரை சாவகச்சேரி பொலிஸார் வழி மறித்தவேளை குறித்த டிப்பர் நிற்காமல் சென்றது.

இதன்போது சாவகச்சேரி பொலிஸார் வேகத்தடையை வீதியில் போட்டவேளை டிப்பரின் சக்கரங்கள் காற்றுப் போனது. டிப்பரை நிறுத்திவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் சாவகச்சேரி பொலிஸார் டிப்பரை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வரும் டிப்பர்களை மடக்கிப் பிடிப்பதற்கு சாவகச்சேரி பொலிஸார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Related Post

பிரபலமான செய்தி