மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு நாளை பாடசாலைகள் மீளத் திறப்பு

user 15-Dec-2025 இலங்கை 25 Views

 நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.

அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை இன்று (15) அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதேவேளை அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகளை நாளை மீண்டும் ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ,அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களிலுள்ள மாணவர்கள் மற்றும் கல்வி, கல்விசாரா ஊழியர்களின் சீருடைகள் தொடர்பில் தளர்வான கொள்கையொன்று பின்பற்றப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Post

பிரபலமான செய்தி