இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ...

user 05-May-2025 இந்தியா 53 Views

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்தி பதற்றத்தைத் தணிக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் கூட்டம் விரைவில் கூடயிருப்பதாக அதன் தலைவரும் ஐ.நா.வுக்கான கிரீஸ் தூதுவர் இவாஞ்ஜெலோஸ் செகரீஸ் Evangelos Sekeris தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்துள்ளமையினால் பதற்றம் மேலும் அதிகரித்து வருவதாக அவா் கவலை தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து, இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும், அவர்களை ஆதரித்தவர்களையும் தண்டிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடியை, விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் நேற்று (04) தெரிவித்தன.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, நியூயோர்க்கில் யுஎன்எஸ்சி-யின் தலைவராகப் பொறுப்பேற்ற இவாஞ்ஜெலோஸ் செகரீஸி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே பதற்றம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு பேரவை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லாமல் இருக்க, இரு நாடுகளும் பதற்றத்தைத் தணித்து, பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீா்வு காண முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்.

Related Post

பிரபலமான செய்தி