உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கட்டுப்பணம் நேற்று(14.03.2025) திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் செலுத்தினார்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.