யாழ்ப்பாணத்தில் சர்வதேச புத்தகக்கண்காட்சி இன்று முதல் ஆரம்பம்....

user 21-May-2025 இலங்கை 104 Views

வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும், யாழ்ப்பாண சர்வதேச புத்தகக்கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய தினம் (21) ஆரம்பித்து வைத்தார்.

எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியின் தொடக்க நாள் நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர், கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

இங்கு உரையாற்றிய ஆளுநர், வாசிப்பே மனிதனை முழுமையடையச் செய்கின்றது. எனவே பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக எங்கள் அறிவுத் தேடலை வளர்த்துக்கொள்ள புத்தகங்களை வாசிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

Related Post

பிரபலமான செய்தி