அமெரிக்காவில் உள்ள உக்ரேனிய ஆதரவாளர்கள் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜே.டி.வான்ஸ் ஆகியோருடன் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelensky) போர்நிறுத்த பேச்சுவாத்தையில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது, ஜெலென்ஸ்கியை நோக்கி, ட்ரம்ப் மற்றும் வான்ஸ் கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த கலந்துரையாடலில் இருந்து ஜெலென்ஸ்கி பாதியிலேயே வெளியேறியிருந்தார். இதன் காரணமாக, அமெரிக்காவில் உள்ள உக்ரேனிய ஆதரவாளர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்களின் கடும் எதிர்ப்பினையும் தூண்டி விட்டுள்ளது.
இதற்கிடையில், ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் வெர்மான்ட் மாகாணத்திற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு கூடிய உக்ரேனிய ஆதரவாளர்கள், "அமெரிக்காவுக்கு பதிலாக ரஷ்யாவிற்கு சென்று பனிச்சறுக்கலில் ஈடுபடுங்கள்" என குறிப்பிட்டுள்ள பதாகைகளை ஏந்தியவாறு வான்ஸுக்கு எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஜெலென்ஸ்கியிடம் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஜே.டி.வான்ஸ் இருவரும் எல்லை மீறி நடந்துகொண்டதாகவும், அமெரிக்க குடிமக்கள் அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் வேறொரு இடத்திற்கு அவசரமாக வெளியேறியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.