மருத்துவத்துறையில் முதலிடம் பெற்ற மாணவி கௌரவிப்பு..

user 29-May-2025 இலங்கை 200 Views

பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் மாவட்ட நிலையில் மருத்துவத்துறையில் முதலிடத்தைப் பெற்ற கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி செல்வி எம்.என். பாத்திமா சப்ரின் கடந்த வாரம் உவெஸ்லி உயர்தரக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் க. குணநாதனால் இவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. சஹ்துல் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான முகம்மட் ஜாபீர், திருமதி பாத்திமா றியாசா, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்சீவன், மகளிர் கல்லூரி அதிபர் திருமதி நஸ்மியா சனூஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Post

பிரபலமான செய்தி