இந்திய நிதியுதவியில் கிழக்கில் புதிய திட்டங்கள்

user 16-Jun-2025 இலங்கை 181 Views

இந்திய நிதியுதவியில் 33 திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தாகவும் இத்திட்டங்களுக்கென 2.3 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான விசேட ஆய்வுக் கூட்டம் அண்மையில் (14) ஆளுநர் அலுவலகத்தில் இடம் பெற்றது.கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் தலைவர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. மக்கள் நலன்சார்ந்த திட்டங்களாகவும் சிலவற்றை பொது நோக்கு அடிப்படையிலான திட்டங்களாகவும் முன்னெடுப்பதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Related Post

பிரபலமான செய்தி