நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

user 26-Nov-2024 இலங்கை 38 Views

நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 23 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 3ஆம் திகதி (03.12.2024) வரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி சீ ஒவ் ஸ்ரீலங்கா எனப்படும்  இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய கடற்றொழிலாளர்களை கைதுசெய்த கடற்படையினர் மறுநாள் (11) கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் மயிலிட்டி துறைமுகத்தில் ஒப்படைத்தனர்.

கைதானவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது நேற்று (25) வரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்றையதினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் 23 கடற்றொழிலாளர்களையும் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி