யாழில் 16 வயதான பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு நடந்தது என்ன ?

user 01-Sep-2025 இலங்கை 104 Views

இடைக்காடு - அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவியின் தந்தை நீண்ட காலமாக மனைவியை பிரிந்திருந்த நிலையில் மாணவி தாயாருடனே வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி தவறான முடிவெடுத்து தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் நெறிப்படுத்தினர்.  

 

Related Post

பிரபலமான செய்தி