யாழில் தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது தீ வைத்த மர்ம நபர்கள்

user 14-Jan-2026 இலங்கை 21 Views

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும் கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டடத்தின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் காரணமாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி