நுவரெலியா நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் 1.23 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம்...

user 23-Sep-2025 இலங்கை 37 Views

நுவரெலியா ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்க்கு உட்பட்ட ஹேவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில்  புதிய கட்டிடம் ஒன்று கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது,

 

பாடசாலை அதிபர் எஸ்.மகேந்திரன் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்தின, பெருந்தோட்ட துரை இராஜாங்க அமைச்சர் உடய பிரத்தியேக செயலாளர் சிவப்பிரகாசம், ஹங்குராங்கெத்த கோட்ட கல்வி பணிப்பாளர் கே.ராசலிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான சசிகுமார்,லீயோ பெணடிக் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த வேலைத் திட்டத்திற்கு கல்வி அமைச்சினால்   1 கோடியே  23 லட்சம் ரூபாய் நிதி ஒடுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில்  ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் எனப் பலரும்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி