மூவாயிரத்திற்கு மேற்பட்ட புதிய நியமனங்கள் !

user 06-Mar-2025 இலங்கை 60 Views

ஏப்ரல் மாதத்தில் 3,147 தாதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கொண்டு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அத்துடன், ஆயிரம் வைத்திய உதவியாளர்களை நியமிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாத நடுப்பகுதிக்குள் 976 குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாத நடுப்பகுதிக்குள் 238 பொது சுகாதார ஆய்வாளர்கள், 65 மருந்தாளுநர்கள், 43 தொழில் சிகிச்சையாளர்கள் மற்றும் 41 கதிரியக்க வல்லுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.  

இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் தாதியர்களுக்கு உறுதியான சம்பள அதிகரிப்பு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.

அனைத்து தர தாதியர்களுக்கும் குறிப்பிடத்தக்க சம்பள உயர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் அதன்போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Related Post

பிரபலமான செய்தி