நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (03) பிற்பகல் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 350 பேர் காணாமல் போயுள்ளனர்.
448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமான இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதே நேரத்தில், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், பதுளை மாவட்டத்தில் 83 இறப்புகளும், குருநாகலையில் 53 இறப்புகளும், கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 29 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 28 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 171 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 73 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 27 பேரும் இன்னும் பேரிடர் காரணமாக காணாமல் போயுள்ளனர்.