மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் ஒன்றில் ஆடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (02) வெளியிட்டது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக் கிண்ண போட்டி 2026 பெப்வரியில் ஆரம்பமாகவுள்ள நிலையிலே அதற்கு தயாராகும் வகையிலேயே இந்த டி20 தொடரில் இரு அணிகளும் ஆடவுள்ளன.
உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி தனது அனைத்தும் போட்டிகளையும் இலங்கையிலேயே ஆடவுள்ளது. இதன்படி இந்த மூன்று டி20 போட்டிகளும் ஜனவரி 7, 9 மற்றும் 11ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரை அடுத்து இலங்கை அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 சர்வதேச போட்டிகளில் ஆடவுள்ளது.