யாழ் - கொழும்பு புதிய தொடருந்து சேவை !

user 07-Jan-2025 இலங்கை 346 Views

கொழும்பு (Colombo) - யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) மேலதிகமாக இரு தொடருந்து சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (Jagatheeswaran) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலமாக யாழ் - கொழும்பிற்கு ஒரேயொரு தொடருந்து சேவை மட்டும் இடம்பெற்று வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருந்தனர்.

இந்தநிலையில், இது தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் பொதுமக்களினால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஆராய்ந்திருந்ததுடன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

எனது வேண்டுகோளிற்கு அமைவாக 15 ஆம் திகதியில் இருந்து ஒரு தொடருந்து சேவையும், 31 ஆம் திகதியில் இருந்து பிறிதொரு தொடருந்து சேவையும் ஆரம்பிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி