மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் அறிவிப்பு !

user 28-Feb-2025 இலங்கை 311 Views

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரணாதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Post

பிரபலமான செய்தி