லண்டனில் தமிழர் கடை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம்

user 17-Dec-2025 சர்வதேசம் 27 Views

லண்டனில் தமிழர் கடை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் லண்டன்வாழ் தமிழர்களியே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் அண்மையில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட திருமணமாகி ஒருவருடமே ஆன இளம் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழரின் கடைக்குள் நுழைந்த நபர் அங்கு கொள்ளையிட முயற்சித்ததுடன், கடைக்கு தீவைக்க முயற்சித்துள்ளார். இதன் போது கடையில் இருந்த நபர், கொள்ளையன் மீது தாக்குதலை மேற்கொண்ட காணொளி வெளியாகியுள்ளது.

அத்துடன் தீவைக்க முயன்ற நபர் கடையில் நின்றவரால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து அங்கு பல துன்பங்களை அனுபவித்து வாழ்க்கையில் முன்னேறி வரும்போது கொள்ளையர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் கலக்கத்தை ஏற்படுத்துயுள்ளது

அண்மைக்காலமாக லண்டனின் தமிழர்களை இலங்கு வைத்து அரங்கேறும் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் லண்டன் வாழ் தமிழர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய்யுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி