ஜப்பானில் வேகமாக பரவும் காட்டுத்தீ !

user 05-Mar-2025 சர்வதேசம் 65 Views

ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்தன.

இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

அதேபோல் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி 1,200 பேர் அங்கிருந்து வெளியேறினர். இதனையடுத்து ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி