கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய 6 பொலிஸார் பணி நீக்கம்

user 27-Jan-2026 இலங்கை 35 Views

  கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6 பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று (26) உத்தரவிட்டிருந்தது.

சந்தேக நபர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.  

Related Post

பிரபலமான செய்தி