யாழில் அண்ணன், தங்கைக்கு நடு வீதியில் நடந்த பெரும் அவலம்...

user 17-Mar-2026 இலங்கை 41 Views

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் நேற்று மாலை (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் மற்றும் அவரது சகோதரியான 19 வயது  யுவதி ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி