கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரு பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்களை, இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) தாக்கல் செய்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் (s.sritharan) தலைமையில், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் குறித்த இரு சபைகளுக்குமான வேட்புமனுக்கள் இன்று (17.03.2025) நண்பகல் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, முன்னாள் தவிசாளர்களான அருணாசலம் வேழமாலிகிதன் மற்றும் சுப்பிரமணியம் சுரேன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Rasamanickam Shanakiyan) தலைமையில் அவர்களது கட்சிக்கான கட்டுப்பணம் இன்று(17) செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பணம் மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தில் செலுத்தப்பட்டுள்ளது.