தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

user 28-Jul-2025 இலங்கை 119 Views

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,007,877 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,560 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 284,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.   

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,600 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 260,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,120 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 248,950 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி