எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வை கருத்திற்கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தநிலையில் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருட்களின் விலை திருத்திற்கு அமைவாக 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.
340 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும்.
281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 303 ரூபாயாகும்.
329 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 353 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.