நுவரெலியா மாவட்டத்தில் இன்றையதினம்(11.02.2025) சில இடங்களில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுத் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதனைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.