தையிட்டி விகாரை இடிக்கப்படுதல் மீண்டுமொரு கருப்பு ஜூலைக்கு வழிவகுக்கும் !

user 18-Feb-2025 இலங்கை 477 Views

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை போன்றதொரு அவல நிலை ஏற்படுவதற்கு வழிவகுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரையை உடைப்பது வெறுமனே பிரச்சினைகளை உண்டாக்கும் எனவும் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அர்ச்சுனா சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இரணைமடுவில் புதிதாக விகாரைகள் கட்டப்படவுள்ளதாக தம்மால் அறியமுடிவதாகவும், விகாரைகளை இனிமேலும் பொது மக்களுடைய காணிகளில் அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்ககூடாது எனவும் அர்ச்சுனா வலியுறுத்தினார்.

Related Post

பிரபலமான செய்தி