வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்!

user 09-Jan-2025 இலங்கை 674 Views

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வட மாகாணத்தில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் வைத்தியர் பவானந்தராஜா வெளிநாட்டு விவகார அமைச்சர் கௌரவ விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று (08-01-2025) நாடாளுமன்ற அலுவலகத்தில் நடத்தினர்.

இதன்போது வடக்கு மாகாணத்தில் 5 தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் ஆர்வமுள்ளவர்கள் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் பதிலளித்தார்.

அதேபோன்று நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வர முடியாது இருக்கும் தமிழர்கள் தாங்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பாகவும் எம்.பி றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி