நாட்டில்,தற்போது நிலவும் கடும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக முன்னர் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உடனடியாக அமுல்படுத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
சில பாடசாலை அதிபர்கள் இந்த பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியமை குறித்து, பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக கல்வி பிரதியமைச்சர் மடுர செனவிரத்ன தெரிவித்தார்.
பாடசாலை நேரங்களில் மாணவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காகவே, இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள தாகவும் அவர் வலியுறுத்தினார்.அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில் மாணவர்களின் உடல்நலப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பாடசாலை அதிபர்களை வலியுறுத்தினார்.