வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் உதவி கோரும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.நான் பணமில்லாமல் பயணம் செய்கிறேன், தயவுசெய்து எனது பயணத்திற்கு உதவுங்கள்” (I am traveling without money, please help my journey) என்ற வாசகத்தை ஏந்தியபடி, இவர் கையேந்துவதை காண முடிந்துள்ளது.கொழும்பின் பரபரப்பான கோட்டை புகையிரத நிலையப் பகுதியில் அமர்ந்திருக்கும் இந்நபர், தமது கையில் ‘யுகுலேலே’ (Ukulele) எனும் சிறிய இசைக் கருவியை வாசித்தவாறு வழிப்போக்கர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். தனது பயணச் செலவுகளுக்காகவும், அடுத்த இடத்திற்குச் செல்வதற்கான பணத்திற்காகவும் அவர் இவ்வாறு மக்களிடம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.குறித்த நபரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, இது குறித்துப் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.அவரது துணிச்சலான பயண முயற்சியைப் பாராட்டி உதவி செய்து வருகின்றனர்.நாட்டில் அண்மைக் காலங்களாக வெளிநாட்டுப் பயணிகள் இது போன்ற நூதன முறைகளில் நிதி திரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.