Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொழுதுபோக்கு

CM விஜய்–சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவு

15 Jun 2026, 01:03 PM
பார்வைகள்: 941
CM விஜய்–சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவு

செங்கல்பட்டு: தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணை இன்று (15) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது.கடந்த டிசம்பர் மாதம் சங்கீதா தாக்கல் செய்த இந்த வழக்கு, இதுவரை பல கட்டங்களாக விசாரணைக்கு வந்த நிலையில், இன்று 4வது முறையாக விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் போது இரு தரப்பினரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரியிருந்தனர். ஆனால், அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அதேவேளை, வீடியோ வழியாக ஆஜராக வேண்டுமெனில் இரு தரப்பினரும் தங்களது இமெயில் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை மீது அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் கவனம் அதிகரித்துள்ளது