Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொழுதுபோக்கு

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்: கமெண்ட்களுக்கு இனி புகைப்படத்துடன் பதில்

23 Jun 2026, 02:33 PM
பார்வைகள்: 2,426
இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்: கமெண்ட்களுக்கு இனி புகைப்படத்துடன் பதில்

மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம், பயனர்களை ஈர்க்கும் வகையில் தனது கமெண்ட் பிரிவில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை எழுத்து மற்றும் எமோஜி மூலம் மட்டுமே பதிலளிக்க முடிந்த நிலையில், இனி பயனர்கள் புகைப்படங்களையும் கமெண்ட்களுக்கு பதிலாக பதிவிட முடியும்.

இந்த புதிய வசதியின் மூலம் கருத்துகளை மேலும் சுவாரஸ்யமாகவும் காட்சிப்பூர்வமாகவும் வெளிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 45 கோடி பயனர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம், ‘ரீல்ஸ்’ உள்ளிட்ட அம்சங்களுக்குப் பிறகு இந்த புதிய அப்டேட்டையும் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.