ஒரே நாளில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு !

user 15-Nov-2024 சர்வதேசம் 2172 Views

ஹிஸ்புல்லா அமைப்பினருடனான மோதலில் தமது தரப்பில் ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல்(israel) இராணுவம் தெரிவித்துள்ளது.அத்துடன் இந்த தாக்குதலில் மேலும் ஒரு சிப்பாய் காயமடைந்துள்ளார்.

தெற்கு லெபனானில்(lebanon) இடம்பெற்ற மோதலின்போதே இந்த இழப்புகள் பதிவாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் பிற்பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக தொடங்கிய படை நடவடிக்கையில் இஸ்ரேல் படைக்கு ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய இழப்பு இதுவென தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அனைவரும் கோலானி படைப்பிரிவின் 51 வது பட்டாலியனில் பணியாற்றியதாக இஸ்ரேல் படைத்துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி ஒரே நாளில் 08 படையினர் கொல்லப்பட்டதே இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி