உறவினரின் மோசமான செயலால் வாழ்வை இழந்த இளைஞன்...

user 27-Aug-2025 இலங்கை 89 Views

அம்பாந்தோட்டை, பெலியத்தை பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று  (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்தை, நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் உறவினர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கத்தி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related Post

பிரபலமான செய்தி