பணம் கேட்டு லண்டன் வாழ் இலங்கை பெண்களுக்கு கொலை மிரட்டல்

user 10-Jan-2026 சர்வதேசம் 24 Views

பிரித்தானியாவில் இலங்கைப் பெண்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, மற்றுமோரு இலங்கையருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் வசிக்கும் ஊடகவியலாளரான மோக்ஷ பிரசாத் தங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிகப்பட்ட பெண்கள் பிரித்தானிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது

லண்டனில் வசிக்கும் ஷானிகா மற்றும் நாதினி ஆகிய இரண்டு இலங்கைப் பெண்களால் இந்தப் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டன. குறித்த இலங்கி பெண்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இசைக்கலைஞர் ரொமேஷ் சுகதபாலா நடத்தும் வெள்ள நிவாரணத் திட்டத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர் தங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்ததாகவும் பெண்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய பொலிஸார் இலங்கை பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்கியுள்ளனர். இந்த முறைப்பாட்டு அளித்த பெண்களில் ஒருவர், தனக்கும் மோக்ஷவுக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கு மட்டுமே தொடர்பு இருந்ததாகக் கூறியுள்ளார்.

அதோடு மோக்ஷ தன்னை ஏமாற்றி பலமுறை பணம் மற்றும் பரிசுகளை பெற்றதாக பிரித்தானிய பொலிஸாரிடம் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான வட்ஸ்அப் கணக்கு தகவல் மற்றும் செய்திகளின் நகல்களும் பிரித்தானிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி