அரச அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

user 04-Aug-2025 இலங்கை 103 Views

கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த சமர்ப்பிப்புகளுக்கான காலக்கெடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஒழிப்பு  ஆணைக்குழு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், சட்டத்தின்படி, முந்தைய காலக்கெடுவுக்கு பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என  இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழு வலியுறுத்தியது.

நிர்வாக அபராதங்களைக் குறைக்க, அதிகாரிகள் தங்கள் அறிவிப்புகளை அந்தந்த நிறுவனத் தலைவர்களிடம் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

புதிய காலக்கெடுவுக்கு பின்னர் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related Post

பிரபலமான செய்தி