2025 இந்தியன் பிரீமியர் லீக் மெகா ஏலத்தில் வனிந்து ஹசரங்க 'மற்றும் மஹீஸ தீக்சன ஆகியோர் ராஜஸ்தான் ரோயல்ஸ் இற்கு விற்கப்பட்டனர்.
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற முதல் நாள் ஏலத்தில் ஹசரங்க 5.25 கோடியை பெற்றுள்ளார்.
இதற்கிடையில், தீக்சன 4.40 கோடி பேரத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
ஹசரங்க 20க்கு 20 போட்டிகளில் 16.65 சராசரியுடன் 287 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2,314 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
இதில் ஒன்பது அரைசதங்களும் அடங்குகின்றன.
தீக்சன இதுவரை மூன்று ஐபிஎல் பருவங்களில் (2022-2024) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் அவர் 27 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.