அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வீதிக்கு இறங்கிய மருத்துவர்கள், ஊழியர்கள்

user 17-Dec-2025 இலங்கை 24 Views

  அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் இணைந்து இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு கோரி மருத்துவர்கள், ஊழியர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து பொலிஸாரால் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் வைத்தியசாலையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு வைத்தியர்கள், பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பல அசளகரியங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

Related Post

பிரபலமான செய்தி