தொடர் கன மழைக்கு பின்னர் வானிலையில் நிகழவுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை

user 29-Nov-2024 இலங்கை 51 Views

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, இன்றைய தினம்(29.11.2024) வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலையானது, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நேற்று (28) இரவு திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீட்டர் தொலைவிலும் காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதன்படி, நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வட மாகாணத்தில் சில இடங்களில் அதிகபட்சம் 100 மி.மீ. க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.

மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    

 

 

 

Related Post

பிரபலமான செய்தி