ரஷ்யா அனுப்பிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் !

user 30-Nov-2024 சர்வதேசம் 68 Views

138 ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா நடாத்திய தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல்களில் பலியான பெண் உக்ரைனின் கெர்சன் நகரை சேர்ந்தவர் என்பதோடு இதில் 8 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

இது தொடர்பில் உக்ரைனின் விமானப்படை கூறுகையில், ரஷ்யா ஒரே இரவில் 138 ஏவுகணைகளை ஏவியதாகவும் அதில் 88 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் எஞ்சிய பகுதிகள் உக்ரைன் தலைநகர் மீது விழுந்ததில் ஒரு மருத்துவமனையும் சேதமடைந்துள்ளது.

இதேவேளை, உக்ரைனின் டன்பாஸ் (Donbas) பிராந்தியத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ரோஸ்டோல்னே (Rozdolne) கிராமத்தை கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது

உக்ரைன் கடுமையான குளிர்காலத்தில் நுழையும்போது இந்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related Post

பிரபலமான செய்தி