செல்பியால் பறிபோன இரு தமிழ் மாணவிகளின் உயிர்..

user 02-Jun-2025 இலங்கை 101 Views

முல்லைத்தீவு - குமிழமுனை பகுதியில் ஆலயமொன்றில் உள்ள கிணற்றில் வீழ்ந்து பாடசாலை மாணவிகள் இருவர் உயிரிழந்தனர்.

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் 15 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் பாடசாலை மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி