மின்சாரக்கட்டணம் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

user 02-Dec-2024 இலங்கை 1658 Views

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மின்சார கட்டணத்தை 30 வீதத்துக்கும் மேலான வீதத்தில் குறைக்கும் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe)  தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதியின் வாக்குறுதியின்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் 30 வீதத்துக்கும் அதிகமாக, மின்சார கட்டணத்தை குறைக்கும் என்று அவர் கூறியுள்ளார்

நேற்று கொழும்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கணிசமாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

Related Post

பிரபலமான செய்தி