ட்ரூடோவின் பழிவாங்கல்..!

user 05-Mar-2025 சர்வதேசம் 58 Views

கனடா (Canada), அமெரிக்கா மீது பழிவாங்கும் நோக்கில், வரியை அதிகரிக்குமானால், அமெரிக்கா தனது பரஸ்பர வரியை அதே அளவில் அதிகரிக்கும் என டொனால்ட் டர்ம்ப் (Donald Trump) எச்சரித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப், கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதித்தமைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப், 30 நாட்கள் தற்காலிகமாக விடுவித்திருந்த வரிக்கட்டுப்பாடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து கனேடியப் பொருட்களுக்கும் 25வீத வரி விதித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், 25 வீத பதிலடி வரிகளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களுக்கு விதிக்கவுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்தார்.

இந்நிலையில், ட்ரம்ப், தனது சமூக வலைதளம் ஒன்றில் ட்ரூடோவின் இந்த பழிவாங்கல் நடவடிக்கை குறித்து கடும் எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

அவர் தனது பதவில், "அமெரிக்கா மீது பழிவாங்கும் வரியை ட்ரூடோ விதிக்கும் போது, ​​எமது பரஸ்பர வரி உடனடியாக அதே அளவு அதிகரிக்கும் என்பதை கனேடிய பிரதமர், ட்ரூடோவிற்கு விளக்குங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி