10ஆவது நாடாளுமன்றத்தின் முதல் விவாத அமர்வு சபாநாயகர் அசோக சபுமல் ரங்வல்ல தலைமையில் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டு்ள்ளது.
இதன்படி இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 10வது நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுவை அமைக்கும் நடவடிக்கையும் இன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றம் இன்றைய தினம் கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இன்றைய தினம் முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது
இந்த விவாதங்கள் முற்பகல் 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நடைபெறவுள்ளன.
இதேவேளை, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.